நாளை மறுநாள் வெளியாகிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர்!

படம் திரையரங்குகளில் ஆக.14ம் தேதி வெளியாக உள்ளது.
நாளை மறுநாள் வெளியாகிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர்!
Published on

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

நாசர், சுதா, ரகு பாபு, சுனில் ரெட்டி, பவானி ஸ்ரீ, விவா ஹர்ஷா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியன், ஹைப்பர் ஆதி, ஸ்ரீஜா ரவி, சர்வதமன் பானர்ஜி, மேத்யூ வர்கீஸ், கல்யாணி நடராஜன், கராத்தே கார்த்திக் மற்றும் மாஸ்டர் சார்விக் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

இளம் வயது பெண் மமிதா அவரைவிட அதிக வயதுள்ள சூர்யாமீது காதல் கொள்வதையும், சூர்யாவின் தந்தை கதாபாத்திரத்தையும் மையமாக வைத்து கதை நகர்கிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஆக.14ம் தேதி வெளியாக உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் (ஆக.7) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com