

விஷால் இயக்கி, நடித்துள்ள புதியப் படம் மகுடம். இப்படம் மூலம் விஷால் தமிழ் திரையுலகில் இயக்குநராகவும் கால்பதிக்கிறார்.
ஆக்ஷன் என்டர்டெயிணராக உருவாகியுள்ள இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் விஷால் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தனது 99வது படமாக இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளநிலையில், இதன் டிரெய்லர் நாளை மறுநாள் வெளியாகிறது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் காத்தாக வாழப்போறேன் பாடல் வெளியாகி உள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை ஹரிஹரன், மேக்னா சுமேஷ் பாடியுள்ளனர்.