`டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் `Ee Rathri' பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

கவுதம் மேனன் தற்பொழுது டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படத்தை இயக்கி உள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
`டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் `Ee Rathri' பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். இதனிடையே இவர்  தற்பொழுது டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் ' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார்.

இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க விஷ்ணு ஆர் தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து தற்பொழுது படத்தின் பாடலான ஈ ராத்திரி பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com