'தி டார்க் ஹெவன்'..! க்ரைம் த்ரில்லர் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

இசையமைப்பாளராக 'ஜாக்கி' படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார்.
'தி டார்க் ஹெவன்'..! க்ரைம் த்ரில்லர் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில் உருவாகியிருக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'.

மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'தி டார்க் ஹெவன்' திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா ஜூன் மாதலம் 25ம் தேதி நடைபெறவுள்ளது.

இப்படம் பற்றி இயக்குநர் பாலாஜி பேசியதாவது:-

தமிழ் ரசிகர்கள் எப்போதும் க்ரைம் த்ரில்லர் படங்களை வெகுவாக ரசிப்பார்கள். அதிலும் குறிப்பாக வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களை எப்போதும் வரவேற்று ஆதரிப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் எண்ணத்திற்கு ஏற்ப உருவாகி இருக்கிறது இந்த 'தி டார்க் ஹெவன்' திரைப்படம்.

ஒரு புறம் தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் போலீசாருக்கு நடந்த கொலைகளில் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை, இப்படி இருக்கும் போது அந்த ஊருக்கு புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் பாரி தன் விசாரணையை தொடங்குகிறார்.

அவர் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா என்பதை மையாமாக கொண்டது இந்த தி டார்க் ஹெவன் திரைப்படம். இந்தப் படத்திற்குப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை நேர்த்தியாக அமைந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.

இசையமைப்பாளராக 'ஜாக்கி' படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார்.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. டப்பிங் வேலைகள், இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் நிறைவடைந்து தணிக்கைக்காகச் சென்றுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com