சின்னத்திரை சித்ரா வழக்கில் திருப்பம்.. கணவர் ஹேம்நாத் சித்ரவதையால் தான் மகள் தற்கொலை செய்துகொண்டார் - தந்தை பதில் மனு

சின்னத்திரை சித்ரா கணவர் ஹேம்நாத் குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இன்று இந்த வழக்கின் மீது சித்ராவின் தந்தை பதில் மனு தாக்கல் செய்தார்.
சித்ரா - ஹேம்நாத்
சித்ரா - ஹேம்நாத்
Published on

சின்னத்திரை நடிகை சித்ரா 2020 - ஆம் ஆண்டு டிசம்பரில் நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சித்ரா

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் கைதான ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இதையடுத்து, சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு எதிராக போலீசார் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல், விசாரணைக்கு ஹேம்நாத் நேரில் ஆஜராவதிலிருந்து நீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தது.

சித்ரா - ஹேம்நாத்

இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சித்ராவின் தந்தை காமராஜ் இடைக்கால மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அதில் ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செய்த சித்ரவதை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்துகொண்டார். ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com