இவை ஆதாரமற்ற வதந்திகள்.. தயாரிப்பாளர் தாணு விளக்கம்..

நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
கலைப்புலி எஸ் தாணு
கலைப்புலி எஸ் தாணு
Published on

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 3டி முறையில் உருவாகும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது.

சூர்யா - வெற்றிமாறன்

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

சமீபத்தில் பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்த சூர்யா, சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் சூர்யா விலக முடிவெடுத்துள்ளதாகவும் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

வாடிவாசல்

இந்நிலையில், இந்த வதந்திகள் உண்மை இல்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "இது ஆதாரமற்ற வதந்திகள். மக்கள் தங்கள் பத்து நிமிட புகழுக்காக இது போன்ற வதந்திகளை பரப்புகின்றனர். யாரும் அதனை நம்ப வேண்டாம். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com