மிச்சாங் புயலில் சிக்கி தவித்தவர்களுக்கு உதவிய 'வெப்பன்' படக்குழு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.திரைப்பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர்.
மிச்சாங் புயலில் சிக்கி தவித்தவர்களுக்கு உதவிய 'வெப்பன்' படக்குழு
Published on

கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து, பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது.

இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர். 'வெப்பன்' படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com