இது இரண்டு ஹீரோ படம்.. வெந்து தணிந்தது காடு குறித்து கவுதம் மேனன் விளக்கம்..

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கவுதம் மேனன் விளக்கமளித்துள்ளார்.
கவுதம் மேனன்
கவுதம் மேனன்
Published on

கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

வெந்து தணிந்தது காடு

ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு

இந்நிலையில், 'வெந்து தணிந்தது காடு' படத்தின் 2-ம் பாகம் இரண்டு ஹீரோக்களை கொண்ட படமாக இருக்கும் என்று கவுதம் மேனன் விளக்கமளித்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "இரண்டாம் பாகத்தில் ஸ்ரீதரன் முக்கியமான கதாபாத்திரம். இது கிட்டத்தட்ட இரண்டு ஹீரோ கொண்ட படமாக தான் இருக்கும்.

கவுதம் மேனன்

முதல் பாகத்தில் முத்து, ஸ்ரீதரனை பார்த்துவிட்டு பேசாமல் போனதன் காரணம் என்னுடைய ரத்தமும் ரத்தம் படிந்த கறையும் அவன் மேல் இருக்கக் கூடாது. இவன் என்னைக்கும் என் வாழ்க்கையில் வரமாட்டான் என்று கூறி தான் பேசாமல் முத்து போகிறார். இந்த காட்சிக்கான விளக்கம் இரண்டாம் பாகத்தில் உங்களுக்கு புரியும்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com