என் மலர்

  சினிமா செய்திகள்

  வாய்தா பட நடிகை தீபா தற்கொலை வழக்கு - காதலனுக்கு சம்மன்
  X

  தீபா (எ) பவுலின் ஜெசிகா

  வாய்தா பட நடிகை தீபா தற்கொலை வழக்கு - காதலனுக்கு சம்மன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியிருந்தனர்.

  சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29) நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

  தீபா (எ) பவுலின் ஜெசிகா

  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா். மேலும் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டனர்.

  தீபா (எ) பவுலின் ஜெசிகா

  அதில், "நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று தீபா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  தீபா (எ) பவுலின் ஜெசிகா

  இந்நிலையில் நடிகை தீபா தற்கொலை விவகாரத்தில், காதலன் சிராஜூதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்தும் வராததால் சிராஜூதீனுக்கு கோயம்பேடு போலீசார் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சம்மனை கொடுத்துள்ளனர். காரைக்குடியில் படப்பிடிப்பில் இருக்கும் சிராஜூதீன், நாளை சென்னையில் விசாரணைக்கு ஆஜாராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாகவும் தீபா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×