உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

உறியடி, உறியடி 2 படங்களை எழுதி, இயக்கி, நடித்தவர் விஜய் குமார்.சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்திற்கு இவர் வசனம் எழுதியுள்ளார்.
உறியடி விஜய் குமார்
உறியடி விஜய் குமார்
Published on

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சேத்துமான் திரைப்படம் வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் உறியடி, உறியடி 2 படங்களை எழுதி, இயக்கி, நடித்தவரும், சூரரை போற்று படத்திற்கு வசனம் எழுதியவருமான விஜய் குமார் நடிக்கிறார். இதன் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் விஜய் குமார் இணைந்துள்ளார்.

இப்படம் கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்களை எழுதியுள்ளார். இதில் 96 படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வஸந்தா இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com