சித்ராவின் கணவர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்.. ஹேம்நாத் நண்பர் மனு தாக்கல்..

சின்னத்திரை நடிகை சித்ரா 2020-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.ஹேம்நாத் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அவரது நண்பர் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகை சித்ரா
நடிகை சித்ரா
Published on

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் கைது செய்யபட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட ஜமீனை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத்தின் நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'தனது நீண்ட கால நண்பரான ஹேம்நாத் மூலம் அவரது மனைவி சித்ராவை எனக்கு நன்றாக தெரியும். ஹேம்நாத் சித்ராவிற்கு கொடுத்த தொல்லைகள் குறித்து ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில், காவல்துறையில் நான் மட்டும் சாட்சியம் அளித்தேன்.

சித்ரா - ஹேம்நாத்

இதற்காக ஹேம்நாத் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். ஹேம்நாத்தை சுதந்திரமாக வெளியே நடமாட விட்டால் சாட்சிகளைக் கலைப்பார். உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com