92 வயது தாயாரை சக்கர நாற்காலியில் அழைத்து வந்து வாக்களித்த எஸ்.வி.சேகர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது தாயை சக்கர நாற்காலியில் அழைத்து வந்து வாக்களித்தார்.
தாயுடன் எஸ்.வி.சேகர்
தாயுடன் எஸ்.வி.சேகர்
Published on

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இதில் பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர். நடிகர்கள் விஜய், அருண் விஜய், மன்சூரலிகான், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் தங்கள் வீட்டருகே இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கை பதிவு செய்தார்கள்.

இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் தன் 92 வயது தாயாரை சக்கர நாற்காலியில் அழைத்து வந்து மந்தவெளிப்பாக்கம் 126 வார்டு செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் வாக்களித்து இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com