மாமனார் மீது புகாரளித்த அண்ணாத்த பட நடிகை

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடிகை ரஞ்சனா நாச்சியார்.இவர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
ரஜினி - ரஞ்சனா
ரஜினி - ரஞ்சனா
Published on

சென்னை கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் ( வயது 38). தற்போது, சின்னத்திரையில் நடித்து வரும் இவர் அண்ணாத்த, நட்பே துணை, எதர்க்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ரஞ்சனா நாச்சியார் தன் மாமனார் சரவண வேல் (வயது 73) மற்றும் அவரது மனைவி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்துவதாக, மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

ரஞ்சனா

இந்த சம்பவம் குறித்து ரஞ்சனா கூறுகையில், "என் கணவருக்கு மனநலம் சரி இல்லை. அவரை எனக்கு திருமணம் செய்து வைத்து என்னை ஏமாற்றிவிட்டனர். என் கணவர் தற்போது, மனநல சிகிச்சை பெற்று வருகிறார்.

என் மாமனார் சரவணவேல் தன் மனைவியுடன் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்தி வருகிறார். இது குறித்து இதற்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். என் புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com