சசிகுமார்- லிஜோமோல் ஜோஷ் நடிப்பில் உருவாகும் திரில்லர் டிராமா

சசிகுமார் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இந்த படத்தில் லிஜோமோல் ஜோஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
சசிகுமார்- லிஜோமோல் ஜோஷ் நடிப்பில் உருவாகும் திரில்லர் டிராமா
Published on

கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சத்யா சிவா. இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சுதேவ் நாயர், பருத்திவீரன் சரவணன், கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சத்யா சிவா- சசிகுமார்- லிஜோமோல் ஜோஸ்

90-களில் நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகுகிறது. 90- களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்துப் படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது.

பாண்டியன் பரசுராம் முதல் முறையாக விஜய கணபதிஸ் பிக்சர்ஸ் (Vijayaganapathy's Pictures) சார்பில் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com