ரன்பீர் கபூர் - ஆலியாபட்டை கோவிலுக்குள் அனுமதிக்காததால் பரபரப்பு

இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ரன்பீர் கபூர் - ஆலியாபட்
ரன்பீர் கபூர் - ஆலியாபட்
Published on

'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆலியாபட் -  ரன்பீர் கபூர்

இதையடுத்து ரன்பீர் கபூர், ஆலியாபட் உடன் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னில் உள்ள மகாகாளி கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அப்போது இந்து அமைப்பினர் சிலர் ஆலியா, ரன்பீரை மகாகாளி கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோஷமிட்டு கருப்புக் கொடி காட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லேசான தடியடி நடத்தப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலியாபட் - ரன்பீர் கபூர்

கடந்த 2011 ஆம் ஆண்டு ரன்பீர் கபூர் தனது பட புரோமோஷன் விழாவின் போது மாட்டிறைச்சி தனக்கு பிடிக்கும் என்று கூறிய வீடியோ தற்போது வைரலானதைத் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது..

X

Maalai Malar
www.maalaimalar.com