சினிமா ரசிகனாக நானும் வெயிட்டிங் - இயக்குனர் ஷங்கர்

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.இவ்விழாவில் ரஜினி மற்றும் கமல் சிற்ப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
சங்கர்
சங்கர்
Published on

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

பொன்னியின் செல்வன்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சங்கர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது, "முதன் முதலாக மணிரத்னம் சார் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கப் போகிறார் என்று கூறியதும் மிகவும் ஆர்வமாக இருந்தது.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனா அருமையாக இருக்கிறதே என்று நினைத்தேன். படம் எப்ப வரும் என்று மிகவும் எதிர்பார்த்து இருந்தேன். இறுதியில் விரைவில் வரவுள்ளது. தமிழ் சினிமா ரசிகனா, மணிரத்னம் சார் ரசிகனா 'பொன்னியின் செல்வன்' பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com