சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்ட 'தி லெஜண்ட்' பட நடிகை..

தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தலா.இவரை சர்ச்சை கருத்தால் ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சித்தனர்.
ஊர்வசி ரவுத்தலா
ஊர்வசி ரவுத்தலா
Published on

பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தலா சமீபத்தில் இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவருக்கும் இந்திய கிரிகெட் வீரர் ரிஷப் பண்டுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வந்தன.

ஊர்வசி ரவுத்தலா

சமீபத்தில் ஊர்வசி ரவுத்தலா அளித்த பேட்டியில், ரிஷப் பண்ட் தன்னை பார்க்க வந்து பலமணி நேரம் காத்து இருந்ததாகவும், நான் சோர்வாக இருந்ததால் அவரை சந்திக்கவில்லை என்றும் மறைமுகமாக பேசி இருந்தார். இதனால் அதிர்ச்சியான ரிஷப் பண்ட் ரசிகர்கள் ஊர்வசி ரவுத்தலாவை கடுமையாக விமர்சித்தனர்.

ரிஷப் பண்டும் கோபமாகி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ''வெற்று விளம்பரத்திற்காக சிலர் பொய்களாக பேசுகின்றனர். அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று ஊர்வசி ரவுத்தலாவை கண்டித்து பதிவு வெளியிட்டு பின்னர் அதை நீக்கினார்.

ஊர்வசி ரவுத்தலா

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ரிஷப் பண்டுடனான சர்ச்சை குறித்து ஊர்வசி ரவுத்தலாவிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பியபோது, ''நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் என்னை மன்னிக்கவும்" என்று கூறினார். ஊர்வசி மன்னிப்பு கேட்டதால் இருவருக்குமான மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com