மாரிமுத்து உடலுக்கு இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா நேரில் அஞ்சலி

நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்.இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரிமுத்து உடலுக்கு இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா நேரில் அஞ்சலி
Published on

நடிகர் மாரிமுத்து 'எதிர் நீச்சல்' தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார்.

இவர் 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு எதிர் நீச்சல் நடிகர்கள், நடிகர் சங்கத் தலைவர் நாசர், சரத்குமார், இயக்குனர் வசந்த், வையாபுரி, லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர், செண்ட்ராயன் மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா மறைந்த நடிகர் மாரிமுத்து உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com