ஒரு நொடியில் நடைபெற்ற சம்பவத்தின் கதை தான் "ஒரு நொடி" இயக்குநர் மணிவர்மன்

திரில்லர் திரைப்படங்களில் ஒரு நொடி வித்தியாசமாக இருக்கிறது. ஒரு நொடியில் நடைபெற்ற சம்பவம் தான் இந்த படத்தின் கதை.
ஒரு நொடியில் நடைபெற்ற சம்பவத்தின் கதை தான் "ஒரு நொடி" இயக்குநர் மணிவர்மன்
Published on

தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய படத்தின் இயக்குநர் மணிவர்மன், ''தணிக்கை குழு இந்த படத்தை பார்த்துவிட்டு, 'நாங்கள் பார்த்த திரில்லர் திரைப்படங்களில் ஒரு நொடி வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் எங்களால் யூகிக்கவே முடியவில்லை. மிகவும் அற்புதமான படைப்பு ' என பாராட்டினர். இது எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது."

"எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி. அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற சம்பவம் தான் இந்த படத்தின் கதை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

'ஒரு நொடி' படத்தில் தமன்குமார், எம்.எஸ். பாஸ்கர், வேல. ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com