படப்பிடிப்பை நிறைவு செய்த வசந்தபாலன்

தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ள ‘அநீதி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
வசந்தபாலன்
வசந்தபாலன்
Published on

‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் அர்ஜூன்தாஸ். இவர் அநீதி என்ற படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த துஷாரா விஜயன் இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபால இயக்கியுள்ளார். இதில் வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

அநீதி

இப்படத்தை பள்ளி நண்பர்களுடன் இணைந்து வசந்தபாலன் “அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்” நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர். கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார். விறுவிறுப்பாக நடைப்பெற்று அநீதி படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை அதிகாரப்புர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com