அவதூறு வழக்கு.. மீரா மிதுனுக்கு இரண்டாவது முறை பிடிவாரண்ட்..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.இவர் மீது தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
மீரா மிதுன்
மீரா மிதுன்
Published on

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு மீராமிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மீரா மிதுன்

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாம் அபிஷேக் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆஜரான நிலையில் நடிகை மீரா மிதுனும் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

இது தொடர்பாக மீரா மிதுனுக்கு 2-வது முறையாக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை வருகிற 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாததால் மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com