எம் குமரன் 2-ம் பாகம்.. நதியாவிற்கு வாய்ப்பில்லை- மோகன் ராஜா அதிரடி

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’.இப்படம் தமிழில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
எம் குமரன் 2-ம் பாகம்.. நதியாவிற்கு வாய்ப்பில்லை- மோகன் ராஜா அதிரடி
Published on

கடந்த 2004-ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயரம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. இந்த திரைப்படத்தில் நதியா, அசின், பிரகாஷ் ராஜ், விவேக் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்த இப்படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான 'அம்மா நன்னா ஒ தமிழா அம்மாயி' என்ற படத்தினுடைய ரீமேக் என்றாலும் தமிழில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல நாட்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்தது.

இந்நிலையில், 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இரண்டாம் பாகத்திற்கான கதை முழுவதும் எழுதி முடித்துவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த பாகத்தில் நடிகை நதியா காதாபாத்திரம் இடம் பெறாது என்றும் மோகன் ராஜா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com