நடிகை கவுதமி புகாரில் 2 பேருக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்

நடிகை கவுதமி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகை கவுதமி புகாரில் 2 பேருக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்
Published on

நடிகை கவுதமி தனக்கு சொந்தமான சொத்துக்களை அழகப்பன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் மோசடி செய்து விற்று விட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் ஆகிய இருவரையும் ஆஜராகுமாறு 6 முறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை ஆஜராகவில்லை.

இந்த நிலையில் நடிகை கவுதமியிடம் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் ஆகியோருக்கு போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவலால் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com