அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்லும் கமல் படக்குழு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைஃப்'.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்லும் கமல் படக்குழு
Published on

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

'தக் லைஃப்' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவின் சைபீரியா பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் இதில் நடிகர் கமல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com