பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவை ஆனது எப்படி? வீடியோ வெளியிட்ட படக்குழு

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -2'.இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவை ஆனது எப்படி? வீடியோ வெளியிட்ட படக்குழு
Published on

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

திரிஷா - குந்தவை
திரிஷா - குந்தவை

திரிஷா - குந்தவை

சில தினங்களுக்கு முன்பு கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதால் பொன்னியின் செல்வன் 2 ரிலீசை அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்து திட்டமிட்டபடி ஏப்ரல் 28-ந்தேதி தேதி வெளியாவது உறுதி என்று தெரிவித்தனர்.

திரிஷா - குந்தவை
திரிஷா - குந்தவை

திரிஷா - குந்தவை

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷாவின் தோற்றம் வடிவமைக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், "கூர்மையான நாக்கு. திடமான மனம். பவர்ஹவுஸ்! எங்கள் நித்திய அழகை நீங்கள் காண ஆவலுடன் காத்திருக்கிறீர்களா? படத்திற்கு பின்னால் திரிஷா குந்தவையாக மாறியது எப்படி என்பதைப் பாருங்கள். விரைவில் முதல் சிங்கிள் வெளியாகும். காத்திருங்கள்" என்று பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com