விஜய் சேதுபதியுடன் செல்பி எடுக்க குவியும் ரசிகர்கள்.. தவிக்கும் படக்குழு

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இந்த படத்தில் ருக்மினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Published on

கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளார். 'புரொடக்ஷன் 5' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ருக்மினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசிய நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு தினசரி உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் படப்பிடிப்பினை பார்வையிடுவதுடன், படத்தின் நாயகனான விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர், சுற்றுலா பயணிகளையும், விஜய் சேதுபதியின் ரசிகர்களையும் கட்டுப்படுத்த தெரியாமல் தவிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com