என் மலர்

  சினிமா செய்திகள்

  நடிகை பாலியல் பலாத்கார வழக்கு.. பிரபல நடிகரின் முன்ஜாமீனை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை..
  X

  விஜய் பாபு

  நடிகை பாலியல் பலாத்கார வழக்கு.. பிரபல நடிகரின் முன்ஜாமீனை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவானவர் விஜய் பாபு.
  • துபாயில் இருந்து கேரளா திரும்பிய விஜய்பாபு, சமீபத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

  கேரளாவைச் சேர்ந்த மலையாள சினிமா நடிகர் விஜய்பாபு. இவர் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் புதுமுக நடிகை ஒருவரை வீடு மற்றும் விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இது தொடர்பாக நடிகை அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார் நடிகர் விஜய்பாபு மீது வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த நடிகர் விஜய்பாபு வெளிநாட்டில் தலைமறைவானார். அங்கிருந்தபடியே அவர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.


  விஜய் பாபு

  அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறிய நீதிமன்றம், போலீசார் அவரை கைது செய்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, சமீபத்தில் எர்ணாகுளம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஆஜரான விஜய்பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  நடிகை பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட கொச்சி அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள விஜய்பாபு வீட்டுக்கு போலீசார் அவரை நேற்று அழைத்து சென்றனர். அங்கு தடயங்களை சேகரித்த போலீசார் இன்றும் விஜய்பாபுவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை முடிந்த பின்பு, நாளை சம்பவம் நடந்த விடுதிக்கு விஜய்பாபுவை அழைத்து சென்று போலீசார் விசாரிக்க உள்ளனர்.


  விஜய் பாபு

  இதன்மூலம் நடிகர் விஜய்பாபுவுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் முன்ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுவின் விசாரணை நடக்கும் போது விஜய்பாபுவுக்கு எதிரான வலுவான சாட்சியங்களை தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  Next Story
  ×