கொலை செய்ய சதி செய்கிறார்.. மனைவி மீது வழக்கு தொடர்ந்த பிரபல நடிகர்..

நடிகர் ரமேஷ் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார்.தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.
நரேஷ்
நரேஷ்
Published on

திரைப்பட நடிகையான பவித்ரா லோகேஷ் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.

நரேஷ் - பவித்ரா லோகேஷ்

சமீபத்தில் ஓட்டலில் ஒரே அறையில் நரேசும் பவித்ராவும் தங்கி இருந்தபோது பிரிந்த மனைவி ரம்யா அறைக்குள் புகுந்து இருவரையும் செருப்பால் அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பானது. மேலும், நரேசும் பவித்ராவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.

நரேஷ் - ரம்யா

இந்நிலையில் தனது முன்னாள் மனைவி ரம்யா கூலி படையை ஏவி தன்னை கொலை செய்ய சதி செய்வதாக குடும்ப நல நீதிமன்றத்தில் நரேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, "திருமணமான சில நாட்களிலேயே ரம்யா என்னை துன்புறுத்தினார். எனது சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். அவரது கொடுமையை தாங்க முடியவில்லை, எனவே பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன்'' என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com