இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ஷூட் செய்யப்படும் - இயக்குனர் சங்கர்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'இந்தியன்-2'.இந்தியன் 2 படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளது.
சங்கர்
சங்கர்
Published on

கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர்.

இயக்குனர் சங்கர், நடிகர் ராம் சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு "ஆர்.சி.15" என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து சமீபத்தில் 'இந்தியன்-2' படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கியது.

ஆர்.சி.15 - இந்தியன் 2

இந்நிலையில், இயக்குனர் சங்கர் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆர்.சி.15 மற்றும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஒரே நேரத்தில் நடைபெறும். ஆர்.சி.15 படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com