தனுஷின் கோரிக்கை.. வீல் சேரில் வந்த நித்யா மேனன்

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'.'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நித்யா மேனன்
நித்யா மேனன்
Published on

'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

நித்யா மேனன்
நித்யா மேனன்

நித்யா மேனன்

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர். இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நித்யா மேனன்
நித்யா மேனன்

நித்யா மேனன்

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது. இதில் படக்குழு திரையுலகினர் என பலரும் கலந்துக் கொண்டனர். அந்த விழாவுக்கு நித்யா மேனன் வீல் சேரில் வந்திருக்கிறார். நடிகை நித்யா மேனன் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார். அதனால் தான் அவர் வீல் சேரில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நித்யா மேனன், "நீங்க இல்லாமல் எப்படி, வீல் சேரிலாவது வரவேண்டும்.." என தனுஷ் கூறியதால் அவர் வந்ததாக தெரிவித்துள்ளார்.

'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com