மோசடி வழக்கு.. பாகுபலி பட நடிகையிடம் போலீசார் விசாரணை..

சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக நடிகை நோரா ஃபதேகியிடம் விசாரணை நடைபெற்றது.
நோரா ஃபதேகி
நோரா ஃபதேகி
Published on

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழிலதிபரை மிரட்டி ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்திருந்தது. மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

நோரா ஃபதேகி

இதையடுத்து நடிகை நோரா ஃபதேகியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த மோசடி வழக்கு குறித்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று (02-09-2022) இவரிடம் ஏழு மணிநேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி தான் பல நிகழ்ச்சிகளில் தன்னுடன் வந்து பேசியுள்ளதாகவும் நோரா ஃபதேகி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com