'என்னய்யா துரோகம் பண்ணேன்..' கதறி அழுத நடிகர் கூல் சுரேஷ்..

நடிகர் கூல் சுரேஷ் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கூல் சுரேஷ்
கூல் சுரேஷ்
Published on

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர். ஒவ்வொரு திரைப்படத்தின் போதும் சமூக வலைதளங்களுக்கு இவர் அளிக்கும் பேட்டி ரசிகர்களைக் கவர்ந்தது. சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வரை அதை புரொமோட் செய்துள்ளார்.

கூல் சுரேஷ்

சமீபத்தில் கூல் சுரேஷின் காரை ரசிகர்கள் அடித்து நொறுக்கியதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால்,இதை மறுத்து கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ரசிகர்கள் என்னை எதற்கு தாக்க வேண்டும், அவர்கள்தான் எனக்குப் பாதுகாப்பு. நான் என்ன துரோகம் செய்தேன். கமெண்ட்களில் என்னைப் பற்றி அவதூறாக பேசுகிறீர்கள்.

சமூக வலைதளங்களில் பிரபலமானாலும் நான் வருமானமின்றி கஷப்படுகிறேன். ரிவியூ பிடிக்கவில்லை என்றால் இனிமேல் வரமாட்டேன். என் தலைவன் சிம்புவிற்காக தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன் அந்த படம் வெளியாகிவிட்டது. நான் ரிவியூ கொடுப்பதால் எனக்கு வருமானம் வரவில்லை.

கூல் சுரேஷ்

ரசிகர்கள் என் மீதுள்ள ஆர்வத்தில் காரின் மீது ஏறினார்கள். அதை நான் சரிசெய்துகொள்கிறேன். என் நண்பன் நடிகர் சந்தனம் எனக்கு உதவுவார். எனக்கு தெரிந்த பத்து இயக்குனர்கள் உதவுவார்கள். தயவு செய்து என்னை பத்தி அவதூறாக பேசாதீர்கள். வெந்து தணிந்தது காடு எஸ்டி ஆருக்கு வணக்கத்த போடு என்று கூறி கொண்டே இருப்பேன் என்று பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com