முன்னணி நடிகர் மீது தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டு.. வைரலாகும் பதிவு..

தனுஸ்ரீ தத்தா தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ளார். இவரின் சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது.
தனுஸ்ரீ தத்தா
தனுஸ்ரீ தத்தா
Published on

தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். "2008-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார்.

தனுஸ்ரீ தத்தா பதிவு

இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "தனக்கு ஏதாவது ஆனால், மீடூ விவகாரத்தில் தான் குற்றம் சாட்டிய நடிகர் நானா படேகர், அவரின் வழக்கறிஞர் மற்றும் அவரது பாலிவுட் மாஃபியா நண்பர்கள்தான் அதற்கு காரணம்.

இந்த பாலிவுட் மாஃபியா என்பது சுஷாந்த் சிங் ராஜ்புத் (SSR) மரண வழக்கில் அடிக்கடி அடிபட்டு வந்த அதே நபர்கள்தான் அவர்களின் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள். சட்டமும் நீதியும் என்னை தோற்கடித்திருக்கலாம். ஆனால் இந்த தேசத்தின் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

X

Maalai Malar
www.maalaimalar.com