நடிகை தீபா தற்கொலை வழக்கு.. காதலனுக்கு கேள்விகளை தயார் செய்த போலீசார்..

வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவரது காதலன் சிராஜூதீனிடம் கேட்பதற்காக 55 கேள்விகளை போலீசார் தயார் செய்துள்ளனர்.
தீபா (எ) பவுலின் ஜெசிகா
தீபா (எ) பவுலின் ஜெசிகா
Published on

சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (வயது 29) நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா். மேலும் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றி அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டனர்.

தீபா (எ) பவுலின் ஜெசிகா

அதில், "நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று தீபா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நடிகை தீபா தற்கொலை விவகாரத்தில், காதலன் சிராஜூதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு அழைத்தும் வராததால் சிராஜூதீனுக்கு கோயம்பேடு போலீசார் வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சம்மனை கொடுத்துள்ளனர்.

தீபா (எ) பவுலின் ஜெசிகா

காரைக்குடியில் படப்பிடிப்பில் இருக்கும் சிராஜூதீன், நாளை சென்னை, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஆஜராவார் என்று அவர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை தீபாவின் வாட்ஸ் ஆப் மற்றும் தொலைபேசி அலைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட விவரங்களை வைத்து காதலன் சிராஜூதீனிடம் கேட்பதற்காக 55 கேள்விகளை போலீசார் தயார் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தீபாவின் ஐ போனை காணவில்லை என்று நடிகையின் சகோதரர் ராஜூ ஏற்கனவே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தீபாவின் சகோதரரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com