உங்களை ஏமாற்ற மாட்டோம்.. நடிகர் விமல் உறுதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விமல் சமீபத்தில் நடிந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உங்களை ஏமாற்ற மாட்டோம் உறுதியளித்துள்ளார்.
விமல்
விமல்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல். இவர் ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘மஞ்சப்பை’, ‘கலகலப்பு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’  போன்ற பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இவர் கடைசியாக ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் பிரசாத் பாண்டியராஜ் இயக்கத்தில் ’விலங்கு’ என்ற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இதில் விமலுடன் இணைந்து இனியா, முனீஷ்காந்த் பாலா சரவணன், ஆர்.என்.ஆர் மனோகர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 18-ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

விலங்கு படக்குழு

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட நடிகர் விமல் பேசியது, ”இந்தக் கதை முதலில் படமாக இருந்தது, ஆனால் கதை சொல்ல சொல்ல எல்லோரும் தொடராக எடுக்கலாம் என்றார்கள். நான் ஹீரோ ஆனால் படமே இல்லாமல் வீட்டில் இருந்தேன், தயாரிப்பாளர் அண்ணன் பிஸியாக இருந்தவர் அவரும் படம் இல்லாமல் இருந்தார், ஒரு படம் தோல்வி கொடுத்த பிரசாந்த் எல்லோரும் இணைந்து எங்கள் அனுபவத்தை பயன்படுத்தி இந்த தொடரை செய்துள்ளோம். உங்களை ஏமாற்ற மாட்டோம். இந்த தொடர் மூலம் எனக்கு தம்பியாக பாலசரவணன் கிடைத்துள்ளான். இனிமே நான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து செய்வேன் என்னுடைய கம்பேக்காக ’விலங்கு” படம் இருக்கும், கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் இந்த தொடர் பிடிக்கும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com