நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் - வடிவேலு உறுதி

நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி-2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
வடிவேலு
வடிவேலு
Published on

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.

வடிவேலு
வடிவேலு

வடிவேலு

இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது, இதனை தொடர்ந்து கோயிலுக்கு சென்று அவர் முருகனை வழிபட்டார். பிறகு கோயில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபாட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சாமி தரிசனம் செய்த வடிவேலு
சாமி தரிசனம் செய்த வடிவேலு

சாமி தரிசனம் செய்த வடிவேலு

அவர் கூறியதாவது, நான் தற்போது நடித்து வெளிவரப்போகிற படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும், நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி-2 போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் மாமன்னன் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தில் நான் குணசித்திர நடிகனாக நடித்திருக்கிறேன்.

வடிவேலுவின் காமெடி குழு
வடிவேலுவின் காமெடி குழு

வடிவேலுவின் காமெடி குழு

நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும். நாய் சேகர் படத்தில் பாடல் பாடியுள்ளேன், அப்பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும். என்னோடு தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்கான காமெடி டிராக் தற்போது இல்லாததால் முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. இனி வரும் படங்களில் அவர்களை இணைத்துக் கொண்டு நடிப்பேன். உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com