நடிகருடன் ஒரே அறையில் தங்கி இருந்த விவகாரம்.. 2 படங்களில் இருந்து நடிகை பவித்ரா லோகேஷ் நீக்கம்

தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பவித்ரா லோகேஷ்.2 படங்களில் இருந்து நடிகை பவித்ரா லோகேஷ் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.
பவித்ரா லோகேஷ்
பவித்ரா லோகேஷ்
Published on

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரருமான நரேஷ், 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார்.

நரேஷ் - பவித்ரா லோகேஷ்
நரேஷ் - பவித்ரா லோகேஷ்

நரேஷ் - பவித்ரா லோகேஷ்

இந்தநிலையில் பவித்ரா லோகேஷ் முதல் கணவரை விட்டு பிரிந்து, நடிகர் நரேசை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருவதாக நரேசின் மனைவி ரம்யா ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். இதை இருவரும் மறுத்த நிலையில் மைசூருவில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கியிருந்தபோது ரம்யா ரகுபதியிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்கபாய்ந்தார் பின்னர் அவரை போலீசார் சமாதானப்படுத்தினர்.

நரேஷ் - பவித்ரா லோகேஷ்
நரேஷ் - பவித்ரா லோகேஷ்

நரேஷ் - பவித்ரா லோகேஷ்

இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், நடிகை பவித்ரா லோகேஷ் நடிக்க இருந்த 2 தெலுங்கு திரைப்படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தெலுங்கு பட உலகின் முன்னணி இளம் நடிகர்களின் படங்களில் அம்மா வேடத்திற்கு நடிகை பவித்ரா லோஷகேசை படக்குழுவினர் தேர்வு செய்திருந்ததாகவும், தற்போது அவரை அந்த படங்களில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com