பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீநாத் பாசி.தொகுப்பாளரிடம் அநாகரீகமாக பேசியதாக காவல்துறை இவரை கைது செய்துள்ளது.
ஸ்ரீநாத் பாசி
ஸ்ரீநாத் பாசி
Published on

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'வைரஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 'சட்டம்பி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

ஸ்ரீநாத் பாசி

இதையடுத்து இவர் 'சட்டம்பி' திரைப்படம் தொடர்பாக பிரபலமான மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பெண் தொகுப்பாளரின் கேள்வியால் எரிச்சலடைந்த அவர், கேமராவை நிறுத்தும்படி கூறிவிட்டு, தொகுப்பாளரையும் அந்தக் குழுவையும் ஆபாசமாகத் திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீநாத் பாசி

இதுபற்றி கொச்சி, மராடு போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ஸ்ரீநாத் பாசியை போலீசார் கைது செய்துள்ளார். மேலும் இவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புகார் பற்றி பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் 'நான் தான் நிஜமாகவே பாதிக்கப்பட்டவன்' என ஸ்ரீநாத் பாசி விளக்கமளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com