

2008-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். அதன்பின் மீண்டும் தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான திருசிற்றம்பலம் படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மாதவன்
இந்நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் மாதவனுடன் கைகோர்த்துள்ளதாக மித்ரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாதவன்-மித்ரன் இணைந்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.