சூர்யா- ஜோதிகா மகள் தியா எடுத்த ஆவணப்படத்திற்கு விருது

சிறந்த திரைக்கதை மற்றும் ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டது.விருது குறித்த தகவலை ஜோதிகா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சூர்யா- ஜோதிகா மகள் தியா எடுத்த ஆவணப்படத்திற்கு விருது
Published on

நட்சத்திர காதல் தம்பதிகளான சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

அவர்களின் மகள் தியா (17), மகன் தேவ் (14) ஆகியோர் மும்பையில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகின்றனர்.

தியா சமீபத்தில் மாணவ, மாணவிகளுக்கிடையே நடந்த குறும்பட போட்டியில் பங்கேற்று 'லீடிங் லைட்' என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.

பெண்களின் கதைகளை பேசும் இந்த படம் சிறந்த திரைக்கதை மற்றும் ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த படத்தினை இயக்கியதற்காக சூர்யா மகள் தியாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த தகவலை ஜோதிகா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில்,"சினிமா துறையில் ஒளிப்பதிவு தொடர்பான பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஆவணப்படமாக எடுத்ததற்கு பெருமைப்படுகிறேன் தியா.

இதுபோன்று தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒளிப்பதிவு பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com