சூர்யாவின் அடுத்த படம்... ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்

விஸ்வநாத் அன்ட் சன்ஸ் திரைப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார்.
GV Prakash Kumar
Published on

நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படமாக 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ரவீனா டான்டன், பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிமிஷ் ரவி மேற்கொள்ள நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

2005-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போன்றே "விஸ்வநாத் அன்ட் சன்ஸ்" படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்து இருக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விஸ்வநாத் அன்ட் சன்ஸ் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், "விஸ்வநாத் அன்ட் சன்ஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் மாதம்," என குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் காதல் பாடலாக இருக்கும் என்று தெரிகிறது. விரைவில் இதன் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com