கேரளாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிலை

10 அடி உயரமுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலையை ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசை அமைப்பாளர் கீரவாணி திறந்து வைத்தார்.
கேரளாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிலை
Published on

இந்திய திரை உலகில் பிரபல பாடகராக திகழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் இன்றும் அனைவரது மனதிலும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து உள்ளது.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வி.டி.பட்டதிரிபாட் நினைவிடத்தில் அவரது உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்தது.

10 அடி உயரமுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலையை ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசை அமைப்பாளர் கீரவாணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பாடகர்கள் சித்ரா, சுஜாதா, மனோ, ஹரிகரன், உன்னிமேனன், ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி.சரண், மதுபாலகிருஷ்ணன், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com