இந்திய பாக்ஸ் ஆபீஸில் வரலாற்றுச் சாதனை: ரூ.400 கோடியைக் கடந்தது 'SPIDER-MAN: BRAND NEW DAY'

இரண்டாம் வாரத்திலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
SPIDER-MAN: BRAND NEW DAY
Published on

டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆபீஸில் ரூ.400 கோடி வசூல் சாதனையை அதிகாரப்பூர்வமாகக் கடந்துள்ளது. இதன் மூலம், இந்திய வரலாற்றிலேயே மிக அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்ற புதிய மைல்கல்லை இத்திரைப்படம் எட்டியுள்ளது.  

இந்தியாவில் வசூல் மழை

முன்னதாக ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' மற்றும் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' ஆகிய படங்கள் வைத்திருந்த அனைத்து கால சாதனைகளையும் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' தகர்த்தெறிந்துள்ளது. வெளியான வெறும் 8-9 நாட்களுக்குள் இந்திய பாக்ஸ் ஆபீஸில் ரூ.400 கோடி மொத்த வசூலையும், ரூ.330 கோடியை விட அதிகமான நிகர வசூலையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

ஆங்கிலத்தில் ரூ.182 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளின் டப்பிங் பதிப்புகளும் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி மாபெரும் வசூலை ஈட்டித் தந்துள்ளன.  

இந்தியாவில் அதிக வசூல் செய்த டாப் ஹாலிவுட் திரைப்படங்கள்

ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே-ரூ.400+ கோடி

அவதார்: தி வே ஆஃப் வாட்டர்-ரூ.378.22 கோடி

3. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்-ரூ.373.22 கோடி

4. அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்-ரூ.227.43 கோடி

உலகளாவிய சாதனைகள்

இந்தியாவில் மட்டுமல்லாது உலகளவிலும் இத்திரைப்படம் $1.188 பில்லியன் (சுமார் ₹10,000 கோடிக்கும் மேல்) வசூலித்து 2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவெடுத்துள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்குப் பிறகு உலகளவில் அதிவேகமாக 1 பில்லியன் டாலர் வசூலை எட்டிய 2-வது படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.  

டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கத்தில், மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 38-வது திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், இரண்டாம் வாரத்திலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இந்தியாவில் ரூ.500 கோடி வசூல் என்ற புதிய இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com