'டெக்சாஸ் டைகர்' படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!

'டெக்சாஸ் டைகர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு.
'டெக்சாஸ் டைகர்' படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!
Published on

‘பேமிலி படம்’ புகழ் இயக்குனர் செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில், விரைவில் வெளியாக இருக்கும் படம் டெக்சாஸ் டைகர். யுகே ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில், ஹிருது ஹரூன் (டியூட், தக்ஸ், ஆல் வி இமேஜின் அஸ் லைட்) சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் ரோகிணி மொல்லேட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், விரைவில் வெளியாகவுள்ள 'டெக்சாஸ் டைகர்' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது.

இது படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்தும் சோனி மியூசிக் இசை உரிமம் குறித்தும் படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் கூறியதாவது,"படப்பிடிப்பு நிறைவடைந்தது மகிழ்ச்சி.

இதோடு இரட்டிப்பு மகிழ்ச்சியாக 'டெக்சாஸ் டைகர்' படத்துடன் சோனி மியூசிக் இணைந்திருப்பது எங்களுக்கு பெருமையான தருணம்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்திற்காக செலுத்திய உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த கூட்டணியை பார்க்கிறோம்.

வரும் மாதங்களில் ரசிகர்கள் டெக்சாஸ் டைகரின் இசையையும் அதன் உலகத்தையும் ரசிப்பதை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம்” என்றார்.

படத்தின் இசை மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com