மலையாளத்தில் பகத் ஃபாசிலுடன் முதல் முறையாக களமிறங்கும் எஸ்.ஜே சூர்யா

இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்ததாக பகத் பாசிலுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார்.அனைத்து கதாப்பாத்திரத்திலும் அவருடைய பெஸ்டை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
மலையாளத்தில் பகத் ஃபாசிலுடன் முதல் முறையாக களமிறங்கும் எஸ்.ஜே சூர்யா
Published on

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்பொழுது இயக்குனர் எஸ்.ஜே சூர்யா என்ற அடையாளத்தை மறைத்துவிட்டு நடிகர் எஸ்.ஜே சூர்யாவாக ஆகிவிட்டார். நடிக்கும் அனைத்து கதாப்பாத்திரத்திலும் அவருடைய பெஸ்டை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்தில் தனுது அபாரமான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதைதொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், மாநாடு, டான் போன்ற பல படங்களில் நடித்து  மக்கள் மனதில் மீண்டும் ஒரு இடத்தை பிடித்தார்.

கடந்த ஆண்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் மார்க் ஆண்டனி திரைப்படம் வசூலில் மாபெரும் உச்சத்தை தொற்றது. தமிழ் மற்றும் தெலுங்குவில் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

வீர தீர சூரன், இந்தியன் 3, ராயன், கேம் சேஞ்சர், எல்.ஐ.சி, சூர்யாஸ் சாட்டர்டே பல சுவாரசிய லைன் அப்ஸ்களை கையில் வைத்துள்ளார் எஸ்.ஜே சூர்யா.

இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்ததாக பகத் பாசிலுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை விபின் தாஸ் இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

இதற்கு முன் மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பலநடையில் படங்களை இயக்கியவர் விபின் தாஸ், இந்த இருப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. பகத் பாசிலின் நடிப்பில் சளைத்தவர் கிடையாது.

பகத் ஃபாசில் சமீபத்தில் நடித்து வெளியான ஆவேசம் திரைப்படம் பார்த்து எஸ்.ஜே சூர்யா அவரின் மிகப்பெரிய ஃபேன் ஆகியதாக கூறியுள்ளார். இந்த உச்சக்கட்ட நடிகர்கள் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க இருப்பதால் இப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com