'சியான் 62' : ஏப்ரல் மாதம் படப்பிடிப்பில் பங்கேற்கும் விக்ரம்

இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது.இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் .
'சியான் 62' : ஏப்ரல் மாதம் படப்பிடிப்பில் பங்கேற்கும் விக்ரம்
Published on

பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரபல நடிகர் சியான் விக்ரம் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

இந்நிலையில், 'சித்தா' புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட புது படத்தில் நடிகர் விரக்ம் நடிக்க இருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சியான் 62' படத்தை இதற்கு முன் 'மும்பைகார்' மற்றும் 'தக்ஸ்' படங்களை தயாரித்த ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் சியான் விக்ரம் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க தொடங்குகிறார்.

இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் விக்ரமுடன் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்துக்குஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 'சியான் 62' படப்பிடிப்பு குறித்த 'அப்டேட்' பகிர்ந்து உள்ளார்.

 அதில் 'சியான் 62' படப்பிடிப்பு தொடர்பாக இயக்குனர் எஸ்.யு. அருண்குமார் தலைமையிலான எங்கள் குழு ஏப்ரல் 2024 முதல் படப்பிடிப்பை தொடங்குகிறது. இதற்காக நாங்கள் முழு உழைப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதில் சியான் விக்ரம் நடிப்பு அனைவரும் திகைக்கும் வகையில் அமைந்து இருக்கும் 'என கூறி உள்ளார்

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com