பிரபல நடிகர் சூர்யா பாடிய 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

புதுமணத் தம்பதிகளுக்கான வாழ்த்துகளையும், வாழ்வியல் கருத்துகளையும் கொண்டாடும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.
VishwanathAndSons
Published on

வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'தி வெடிங் சாங்' லிரிக் வீடியோ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை, நடிகர் சூர்யாவே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருமணப் பாடல்

கென் கருணாஸ் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல், ஒரு குடும்பத் திருமண விழாவின் கொண்டாட்டங்களை மையமாகக் கொண்டு துள்ளலான இசையுடன் பின்னப்பட்டுள்ளது. "மேளம் கொட்ட தாளி கட்ட பையன் பொண்ணு ஒன்னாக... சிரிப்பே மாறாம நீ பார்த்துக்கணும் கண்ணாக" என்ற வரிகள் மூலம் புதுமணத் தம்பதிகளுக்கான வாழ்த்துகளையும், வாழ்வியல் கருத்துகளையும் கொண்டாடும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்

சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்டியூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்கு ரிலீஸ் தேதி

2026-ஆம் ஆண்டின் மிகப்பெரிய குடும்பத் திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'விஸ்வநாத் & சன்ஸ்', வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆதித்யா மியூசிக் தமிழ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த லிரிக் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com