ரியோவின் 'ராம் இன் லீலா' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு!

இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
RamInLeela-Second-Single
RamInLeela-Second-Single
Published on

நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கும் 'ராம் இன் லீலா' திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் பாடலான ‘செப்பு சேல’ அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.

துள்ளலான திருமணக் கொண்டாட்டப் பாடலாக வெளிவந்துள்ள இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

'செப்பு சேல' வீடியோ பாடல்

ஒரு பிரம்மாண்டமான திருமண விழாவை மையமாகக் கொண்டு இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் ரியோ ராஜ் மற்றும் அறிமுக நாயகி வர்த்திகா ஆகியோரின் அதிரடியான நடன அசைவுகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

அங்கித் மேனனின் இசையமைப்பில், கிராமிய மணம் மாறாத அதே சமயம் நவீன பாப் தாளங்களுடன் இப்பாடல் அமைந்துள்ளது.

பாடகர் வி.எம். மகாலிங்கத்தின் குரலும், உமா தேவியின் எளிய வரிகளும் பாடலுக்குப் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

திரைப்படக்குழு

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது நகைச்சுவையான நடிப்பால் கவர்ந்த ரியோ ராஜ் மற்றும் அறிமுக நாயகி வர்த்திகா இவர்களுடன் முனிஷ்காந்த், சேட்டன், நயனா எல்சா, பிரியங்கா நாயர், மாளவிகா அவினாஷ், மாகாபா ஆனந்த், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார். இது ஒரு கலகலப்பான மற்றும் காதல் நிறைந்த குடும்பத் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ், ஆய்வா எண்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com