ஜூலை 24-ல் வெளியாகும் 'சத்தியவான் சாவித்திரி'

பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜூலை 24-ல் வெளியாகும் 'சத்தியவான் சாவித்திரி'
Published on

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகி உள்ள படம் 'சத்தியவான் சாவித்திரி'. பிரவீன் எஸ். விஜய் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார்.

இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், 'சத்தியவான் சாவித்திரி' படம் அடுத்த மாதம் 24-ந்தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com