ஆர்யா வழங்கும் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம்

முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கவுள்ளார். நடிகர் ஆர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ஆர்யா வழங்கும் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு நடித்து 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் வெளியாகியது. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை தீபா மற்றும் பலர் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ5 இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கியது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகியப் பின் படம் ரசிகர்கள் அனைவராலும் பாராட்டுப் பெற்றது.

இப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்கவுள்ளனர் அதற்கான பூஜை விழா இன்று நடைப்பெற்றது. முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கவுள்ளார். படத்தில் நடிகர் ஆர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கதாநாயகியாக மீனாக்ஷி சவுத்ரி நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைக்கவுள்ளனர். 

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள் மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com